பாலிடெக்னிக் விரைவுரையாளர் காலிப்பணியிடங்கள் - 1060 பணியிடங்களுக்கு போட்டி தேர்வு அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 60 விரைவுரையாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் விரைவுரையாளர் காலிப்பணியிடங்கள் - 1060 பணியிடங்களுக்கு போட்டி தேர்வு அறிவிப்பு
x
2017 ம் ஆண்டு  பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இத்தேர்வில் பல்வேறு   முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அத்தேர்வினை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதனையடுத்து தற்போது மீண்டும் காலியாக உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 190மதிப்பெண்களுக்கு ஆன்லைன் முறையில் இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி,தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.Next Story

மேலும் செய்திகள்