"வெங்காய விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து

வெங்காயம் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெங்காய விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து
x
வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர் வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். திமுக எம்.பி.க்கள் இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.
Next Story

மேலும் செய்திகள்