"உள்ளாட்சி தேர்தலில் 'விவிபேட்' பயன்படுத்தப்படாது" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 'விவிபேட்' இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
x
உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 'விவிபேட்'  இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு வாக்காளர் கல்விக்கு ழுழுவின் மண்டல பயிலரங்க கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தி வருகிறோம் என கூறினார். முதியவர்கள் வாக்களிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை தமிழகத்தில் அமல்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்