தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் - மத்திய அரசு அனுமதி

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் - மத்திய அரசு அனுமதி
x
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை உள்ளிட்ட 3 இடங்களில் புதிதாக 3 இடங்களை தொடங்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தலா 325 கோடி மதிப்பில் 3 இடங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்காக 40 சதவீதமும், மத்திய அரசின் பங்காக 60 சதவீதமும் கொண்டு மருத்துவக் கல்லூரிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்