"விழுப்புரத்தில் ரூ.70.59 கோடி மதிப்பில் சட்டக்கல்லூரி" - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

விழுப்புரத்தில் 70 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு சட்டக் கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
விழுப்புரத்தில் ரூ.70.59 கோடி மதிப்பில் சட்டக்கல்லூரி - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
x
விழுப்புரத்தில் 70 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு சட்டக் கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள், 7ல் இருந்து 14ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆசியாவிலேயே அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் தான், சட்டப்படிப்பிற்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் நகராட்சியின் 100வது ஆண்டை முன்னிட்டு 50 கோடி ரூபாய் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றார். 

Next Story

மேலும் செய்திகள்