திருவாரூர் : 150 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்ட முயற்சி

திருவாரூர் அருகே 150 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவாரூர் : 150 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்ட முயற்சி
x
திருவாரூர் அருகே 150 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அகர திருநல்லூர் கிராமத்தில் உள்ள இடுகாட்டில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று உள்ளது. இறந்தவர்களின் சடலங்களை இடுகாட்டில் எரித்துவிட்டு அந்த மரத்திற்கு மாலைகள் அணிவிப்பதை மக்கள் வழக்கமாக வைத்திருந்தனர். இந்த நிலையில் அந்த மரத்தை வெட்ட பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டதை தொடர்ந்து மரம் வெட்ட ஊழியர்கள் வந்தனர். ஆனால் மரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்த மக்கள், அவர்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்