தேனி: அம்மா சிமெண்டை கடத்தி அதிக விலைக்கு விற்பனை

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அம்மா சிமெண்டை எடுத்து வந்து கூடுதல் விலைக்கு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி: அம்மா சிமெண்டை கடத்தி அதிக விலைக்கு விற்பனை
x
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அம்மா சிமெண்டை எடுத்து வந்து கூடுதல் விலைக்கு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தமிழக அரசு அம்மா சிமெண்ட் என்ற திட்டத்தின் கீழ் சிமெண்ட்களை விற்று வருகிறது. இந்நிலையில், மதுரையில் இருந்து அம்மா சிமெண்ட்களை கடத்தி வந்து வருசநாடு பகுதியில் சிலர் கூடுதல் விலைக்கு விற்று வருவதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆய்வு நடத்திய போலீசார், லாரி மற்றும் 50 மூட்டை அம்மா சிமெண்ட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வருசநாடு கிராமத்தை சேர்ந்த பால்பாண்டி, உசிலம்பட்டியை சேர்ந்த பரமசிவம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்