"வெங்காய இறக்குமதியை விரைவு படுத்த வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இறக்குமதியை விரைவுப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
வெங்காய இறக்குமதியை விரைவு படுத்த வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இறக்குமதியை விரைவுப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், அவற்றையும் தாண்டி வெங்காய விலை உச்சத்தை நெருங்குவது மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். வெங்காயத்தின் தேவை - வரவு இடைவெளியை குறைப்பது ஒருபுறமிருக்க, விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் தான் வெங்காய விலையை குறைக்க முடியும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்