பெண்ணையாறு நதிநீர் பிரச்சினையில் சட்ட போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமைகள் நிலை நாட்டப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

பெண்ணையாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினையில் சட்ட போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமைகள் நிலை நாட்டப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பெண்ணையாறு நதிநீர் பிரச்சினையில்  சட்ட போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமைகள் நிலை நாட்டப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
x
இதுதொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு அவர் விடுத்துள்ள பதி​லில்

பெண்ணையாற்றின் குறுக்கே அணை மற்றும் நீர் வரத்தை  திருப்புவதற்கான கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றை எதிர்த்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

மார்கண்டேய நதியில் அணை கட்டுவதற்காக கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டதால் அதனை தடுத்து நிறுத்த கோரி கடந்த ஜூலை மாதம் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 


எனினும் இந்த மனுவை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்றம், இதற்கு தீர்வு காண நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசை அணுகுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சத்தை முழுமையாக படிக்காமலும், அசல் வழக்கு நிலுவையில் உள்ளதை அரசியல் காரணங்களுக்காக மறைத்து கூறுவதையே துரைமுருகன் வாடிக்கையாக கொண்டுள்ளாதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

காவிரி நதி நீர் பிரச்சனைஆகட்டும்,  முல்லை பெரியாறு பிரச்சினை ஆகட்டும் திமுக ஆட்சியில், எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ​​எனறும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

பெண்ணையாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினையிலும் தொடர்ந்து சட்ட போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்