மதுரை : சாரல் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலூர், அழகர் கோவில், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
மதுரை : சாரல் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
x
மதுரை மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலூர், அழகர் கோவில், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. 

விருதுநகர் : இடியுடன் கூடிய கனமழை 

விருதுநகர் மற்றும் சாத்தூர்  சுற்றுவட்டாரப் பகுதிகளில்  இடியுடன் கூடிய கன மழை பெய்தது. காலை முதல்  வெயில் வாட்டி வந்த நிலையில்,  1 மணி  நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து  குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

நாமக்கல் : இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு 10 மணி முதல் இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. வயல் வெளிகளில் தண்ணீர் குளம் போல்  தேங்கி உள்ளது. மழை காரணமாக  பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

கோவில்பட்டி : பலத்த மழை - பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து 

கோவில்பட்டி பகுதியில் கடந்த வாரம் பலத்த மழை பெய்த நிலையில்  சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவில்  லேசான சாரலுடன்  தொடங்கிய மழை நேரம் ஆக ஆக  இடி,மின்னலுடன் கன மழையாக நீடித்தது. இதனிடையே  கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் வந்த அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கி கொண்டது. ஜே.சி.பி. மூலம் பேருந்து மீட்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்