போக்குவரத்து பணிமனைக்கு நிலம் வழங்கிய மூதாட்டிக்கு இழப்பீடு வழங்கவில்லை

ஆம்பூரில் போக்குவரத்து பணிமனைக்கு நிலம் வழங்கிய மூதாட்டிக்கு, இழப்பீடு வழங்காத‌தால், 10 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது.
போக்குவரத்து பணிமனைக்கு நிலம் வழங்கிய மூதாட்டிக்கு இழப்பீடு வழங்கவில்லை
x
ஆம்பூரில் போக்குவரத்து பணிமனைக்கு நிலம் வழங்கிய மூதாட்டிக்கு, இழப்பீடு வழங்காத‌தால், 10 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த கிரிஜாம்மாள் என்ற மூதாட்டி, போக்குவரத்து பணிமனைக்காக தம்மிடம் இருந்து வாங்கப்பட்ட நிலத்திற்கு அரசு இழப்பீடு வழங்கவில்லை என குற்றம்சாட்டி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், கிரிஜாம்மாளுக்கு 1 கோடியே 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்த‌து.  ஆனால் அரசு இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்த‌தால், 30 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல்கட்டமாக 10 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டதால், வேலூர் போக்குவரத்து பணிமனையில் பரபரப்பு நிலவியது. அதே சமயம், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 
 


Next Story

மேலும் செய்திகள்