"ராபர்ட் பயஸின் பரோல் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது" : உயர்நீதிமன்றத்தில் தமிழக சிறைத்துறை தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸின், பரோல் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
ராபர்ட் பயஸின் பரோல் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது : உயர்நீதிமன்றத்தில் தமிழக சிறைத்துறை தகவல்
x
மகன் திருமணத்துக்கு 30 நாட்கள் பரோல் கோரி ராபர்ட் பயஸ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, சிறைத்துறைக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சிறைத்துறை இன்று தாக்கல் செய்த மனுவில், ராபர்ட் பயஸின் பரோல் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை பதிவு செய்த  நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்