பழனியில் பூசாரியை குத்திக்கொலை செய்த சாமியார்

பழனியில் முன்விரோதம் காரணமாக, சாமியார் ஒருவர் கோவில் பூசாரியை குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனியில் பூசாரியை குத்திக்கொலை செய்த சாமியார்
x
பழனியில் இடும்பன் கோவில் அருகே வில்வக்குடில் என்ற கோவில் உள்ளது. இதை மலர்கனி ராஜா என்ற பூசாரி நிர்வாகம் செய்து வந்தார். இந்த கோவிலுக்கு அருகே உள்ள செல்லத்துரை என்பவரது சமாதியில், தர்மராஜ் என்ற சாமியார் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை மனைவி விஜயாவுடன், மலர்கனி ராஜா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த தர்மராஜ் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார்.  மலர்கனி ராஜா மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீசார், தர்மராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்