வரும் 24 ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு :ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக அறிவிப்பு

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 24 ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு :ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக அறிவிப்பு
x
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக இதனை அறிவித்துள்ளனர். சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் 24ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்