சென்னையில் 12 மணி நேரத்தில் நடைபெற்ற 3 கொலைகள்

சென்னையில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 12 மணி நேரத்தில் நடைபெற்ற 3 கொலைகள்
x
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர்  ஜானகிராமன். ஐசிஎப் பில் வேலை பார்த்து வந்த இவர், பெரவள்ளூர் பகுதியில் இளங்காளியம்மன் கோயிலின் நிர்வாகியாவும் உள்ளார். இந்நிலையில் பூசாரி கஞ்சா அடித்து விட்டு கோயிலுக்கு  வந்த புகார் தொடர்பாக அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளார்.  இதில் ஆத்திரமடைந்த பூசாரி ஓம்பிரகாஷ் ஜானகி ராமனை வெட்டி கொலை செய்துள்ளார். இதேபோல் மயிலாப்பூர் நொச்சி நகரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ராஜேஷ் என்பவரின் செல்போனை பறித்து சென்றுள்ளனர். மறுநாள் செல்போனை வாங்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷின் நண்பர் கார்த்திக் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இதேபோல்  சென்னை பாடி புதுநகரில் அழகுமுத்து என்பவரை பட்டபகலில் 4 பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். 12 மணி நேர்த்தில் அடுத்தடுத்து  3 கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்