முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா - 8,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழாவும், 57 வது குருபூஜையும் நடைபெற உள்ளது.
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா - 8,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு
x
முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. மறுநாள் குருபூஜை நடைபெறுவதை ஒட்டி அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை பாதுகாப்புக்காக 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடு இருப்பதாகவும், அடிப்படை தேவைகளான  குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில்,  யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்களுடன் 112-வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா தொடங்கியது.  பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் தொடங்கிய பூஜையில், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்