நாகையில் தீபாவளி போனஸ் வழங்க கோரி போராட்டம்

நாகையில் தீபாவளி போனஸ் வழங்க கோரி, தனியார் நிறுவன ஊழியர்கள் இரவில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகையில் தீபாவளி போனஸ் வழங்க கோரி போராட்டம்
x
நாகையில் தீபாவளி போனஸ் வழங்க கோரி, தனியார் நிறுவன ஊழியர்கள் இரவில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒக்கூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்றிரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்