திரும்பிய அதிமுகவின் வரலாறு..!

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த அதிமுக, தற்போதைய இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் மூலம் அதிமுகவின் பழைய வரலாறு திரும்பியுள்ளது.
திரும்பிய அதிமுகவின் வரலாறு..!
x
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது, கடந்த  2004-ம் ஆண்டு  நடந்த நாடாளுமன்ற தேர்தலில்,  திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து, 2005-ம் ஆண்டில், காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில், காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட மைதிலி திருநாவுக்கரசு, கும்மிடிப்பூண்டியில் போட்டியிட்ட கே.எஸ் விஜயகுமார் ஆகியோர் அமோக வெற்றி பெற்றனர். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இரண்டு தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார். இதுபோலவே, சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக ஒரே ஒரு இடத்தை மட்டும் கைப்பற்றியது. இந்த நிலையில், 5 மாதங்களில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அதிமுகவின்  பழைய வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்