முரசொலி அலுவலகம் குறித்த கருத்து, பிரச்சினைகளை திசை திருப்பும் முயற்சி - ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ

முரசொலி அலுவலகம் குறித்து பொன். ராதாகிருஷ்ணனின் கருத்து திசை திருப்பும் முயற்சி என ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
முரசொலி அலுவலகம் குறித்த கருத்து, பிரச்சினைகளை திசை திருப்பும் முயற்சி - ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ
x
முரசொலி அலுவலகம் குறித்து பொன். ராதாகிருஷ்ணனின் கருத்து திசை திருப்பும் முயற்சி என ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று  தாம்  கூறியதாக  பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு அவர் விளக்கம் தந்துள்ளார். அப்போதைய சூழ்நிலையில் நான் அதுபோன்று கருத்து தெரிவித்து இருந்ததாகவும் ஆனால் அக்கருத்து தவறானது என்பதை பின்னர் உணர்ந்த தாகவும் வைகோ விளக்கம் அளித்துள்ளார். தி.மு.க. மீது சிலர் உள்நோக்கத்தோடு கணைகள் வீசுவதை தமிழக மக்கள் நன்றாக உணர்வார்கள் என்று குறிப்பிட்ட வைகோ, தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டும் மு.க. ஸ்டாலின் முயற்சியை எவராலும் தடுக்க  முடியாது என்றும் தெரிவித்துள்ளார் .


Next Story

மேலும் செய்திகள்