ராமநாதபுரத்திலும் தொன்மையான அடையாளம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கலையூர், பாம்புவிழுந்தான் ஆகிய கிராமங்கள் உள்ளன.
ராமநாதபுரத்திலும் தொன்மையான அடையாளம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
x
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கலையூர், பாம்புவிழுந்தான் ஆகிய கிராமங்கள் உள்ளன. கீழடியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊர்களில் வைகை நாகரீகத்தின் தொடர்ச்சி இருக்கக்கூடும் என வரலாற்று ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். கலையூர் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி, மனித பல் ஆகியவை ஏற்கெனவே  கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பாம்புவிழுந்தான் கிராமத்தில், ராக்கப்பெருமாள் கோயில் பணிக்காக மண் அள்ளிய போது, அந்த இடத்தில் பழங்கால உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து , இந்த கிராமங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடகோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். தமிழக வரலாற்றை உலகறியச் செய்த கீழடி போல, கலையூரும் மாற வேண்டும் என்பதே  அனைவரது எதிர்பார்ப்பும்..

Next Story

மேலும் செய்திகள்