தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
x
தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசுடன் இணைந்து அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார். இந்த 6 மருத்துவக் கல்லூரிகளுக்குமான இடங்களை தமிழக அரசு அடையாளம் காட்டியுள்ள நிலையில், கட்டுமானப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பிற அனுமதிகளை விரைந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இத்துடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் கட்டுமான பணிகளையும் மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்