கோவையில் திருநங்கை, அழகி வேடத்தில் நூதன வழிப்பறி- 5 இளைஞர்கள் கைது

திருநங்கை மற்றும் அழகி போல் வேடமிட்டு இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் திருநங்கை, அழகி வேடத்தில் நூதன வழிப்பறி- 5 இளைஞர்கள் கைது
x
கொள்ளை, வழிப்பறி சம்பவங்களுக்கு வழக்கமான பாணிகளை தவிர்த்துவிட்டு, தற்போது புதிய உத்திகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர் கொள்ளையர்கள். திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவர் கல்வி சான்று நகல் வாங்குவதற்காக கோவை பீளமேட்டில் உள்ள தான் படித்த கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த திருநங்கைகள் இருவர் முகவரி கேட்பது போல் நடித்து விக்னேஷிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.  இதை சற்றும் எதிர்பார்க்காத விக்னேஷ் கூச்சலிட்டுள்ளார். இதை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருநங்கைகள் இருவரையும் விரட்டி பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன்,  கனி என்ற இருவரும் திருநங்கை  வேடத்தில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.  அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து போலீசார் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  இதேபோல்  கோவை காந்திபுரம் ராம்நகர் பகுதியில்  நடந்து சென்று கொண்டிருந்த கேரளாவை சேர்ந்த சவுகத் அலி என்பவரை அழகிகள் மூன்று பேர் இடித்து தள்ளி பணம் பறிக்க முயன்றுள்ளனர்.இது குறித்து சவுகத் அலி கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வேடத்தில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற விஜய், ரத்தீஷ், மணி ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்