கர்நாடக போலீசாரின் வாகனத்தை மடக்கிப் பிடித்த தமிழக போலீசார் - சினிமா பாணியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

திருச்சி நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை அழைத்து வந்த கர்நாடக போலீசாரின் வாகனத்தை தமிழக போலீசார் சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக போலீசாரின் வாகனத்தை மடக்கிப் பிடித்த தமிழக போலீசார் - சினிமா பாணியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
x
திருச்சி நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவர் ஏற்கனவே பெங்களூரு வங்கி கொள்ளை வழக்கிலும் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர். இங்கு கொள்ளையடித்த நகைகளை திருச்சி திருவெறும்பூரில் பதுக்கி வைத்திருப்பதாகவும் கர்நாடக போலீசாரிடம் முருகன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை அழைத்துக் கொண்டு திருச்சி வந்த கர்நாடக போலீசார் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளுடன் மீண்டும் பெங்களூரு நோக்கி சென்றனர். இதுகுறித்த தகவல் திருச்சி போலீசாருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து பெரம்பலூர் அருகே போலீசார் காரை மடக்கி பிடிக்க திட்டமிட்டனர். பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பகுதியில் கர்நாடக போலீசாரின் கார் வந்த போது அதனை சினிமா பாணியில் தமிழக போலீசார் மடக்கி பிடித்தனர். காரில் இருந்த 11 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் திருச்சி நகைக்கடை வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் நகைக் கடைக்கு சொந்தமான நகைகள் என உறுதியானதாகவும் கூறப்படுகிறது ..  இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பெரம்பலூரில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

Next Story

மேலும் செய்திகள்