நியூட்ரினோ திட்டம் - பிடிகொடுக்காத தமிழகம், கேரளா

தேனி நியூட்ரினோ ஆய்வு திட்டத்தில், கேரள அரசின் முடிவுக்கு பின்னரே தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கப் போவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
நியூட்ரினோ திட்டம் - பிடிகொடுக்காத தமிழகம், கேரளா
x
தேனி நியூட்ரினோ ஆய்வு திட்டத்தில், கேரள அரசின் முடிவுக்கு பின்னரே தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கப் போவதாக தமிழக அரசு கூறியுள்ளது. தேனி மாவட்டத்தில், நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் காணொலி காட்சி மூலம், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், கேரள தலைமை செயலாளர் பங்கேற்றனர். அப்போது, மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த  மண்டலமாக அறிவிக்க கேரளா வலியுறுத்தியுள்ளது. மேலும், மதிகெட்டான் சோலையை அங்கீகரித்தால் தான், நியூட்ரினோ திட்டத்தில் முடிவெடுப்போம் என்றும் கேரளா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கேரள அரசு ஒரு முடிவை எடுத்த பின்னரே, திட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்