ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள்

ராசிபுரத்தில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள் .பள்ளிக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கினர்
ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள்
x
நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம் அருகே பட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளியில்  1993 கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி கெளரவித்தனர். விழாவில் ஆசிரியர்களுக்கு சந்தனமாலை அணிவித்து ,  அழைத்து வந்து முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசுகள் வழங்கினர். ஆசிரியர்கள் பரிசுகளை கண்ணீர் மல்க பெற்று கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. மேலும் பள்ளிக்கு தேவையான சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள  கல்வி உபகரணங்களையும் அவர்கள் வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்