நாகை கிராமங்களில் பரவி வரும் மர்ம காய்ச்சல் - அரசு மருத்துவமனைகளில் 2,400 பேர் அனுமதி

நாகை மாவட்டத்தில், பல்வேறு கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நாகை கிராமங்களில் பரவி வரும் மர்ம காய்ச்சல் - அரசு மருத்துவமனைகளில் 2,400 பேர் அனுமதி
x
நாகை மாவட்டத்தில் வேகமான பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு அரசு மருத்துவனைகளில் இதுவரை 8 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.  நாகை, சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம் அரசு மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 400 பேர் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 2 பெண்களை  தனி பிரிவில் வைத்து தட்டணுக்கள் குறையாதவாறு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த டெங்கு காய்ச்சல், தற்போது பல்வேறு கிராமங்களில் வேகமான பரவ தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்