பி.எட். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம்-மறு மதிப்பீடு மூலம் ஆசிரியர் கண்டுபிடிப்பு

பி.எட். தேர்வு விடைத் தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு, மூன்றாண்டுகள் தடை விதிக்க, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு எடுத்துள்ளது.
பி.எட். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம்-மறு மதிப்பீடு மூலம்  ஆசிரியர் கண்டுபிடிப்பு
x
கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் பி.எட்.  பயின்ற மாணவர்களுக்கான தேர்வு, கடந்த மே, ஜூன் மாதங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியது நன்றாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்தது உள்ளிட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாக சர்ச்சை வெடித்தது. இதனால் விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே 
விடைத்தாளை சரியாக திருத்தம் செய்யாத ஆசிரியர்களுக்கு, 3 ஆண்டுகள் தேர்வு பணிகளில் ஈடுபட தடைவிதிக்க ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு எடுத்துள்ளது. விசாரணையின் முடிவில் துறை ரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்