மதுரை தல்லாகுளத்தில் திருவிழாவில் இளைஞர் வெட்டிக்கொலை

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் திருவிழாவில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை தல்லாகுளத்தில் திருவிழாவில் இளைஞர் வெட்டிக்கொலை
x
மதுரை மாவட்டம் புதூர் ஆத்திகுளத்தை சேர்ந்த  கோபால்சாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்காக அங்கு நண்பர்களுடன் கோபால்சாமி சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 7 பேர் கும்பல்  கோபால்சாமியை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த கோபால்சாமி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்று உள்ளதாக தெரியவந்துள்ளது.கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்