விரைவில் வருவேன் - அமமுக-வினருக்கு செய்தி அனுப்பும் சசிகலா

சிறையிலிருந்து சசிகலா விடுதலையானவுடன் அவரது அரசியல் எப்படி இருக்கும்
விரைவில் வருவேன் - அமமுக-வினருக்கு செய்தி அனுப்பும் சசிகலா
x
பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் இருக்கும் சசிகலா விடுதலையானபிறகு அ.தி.மு.க. பக்கம் சாய்வாரா? தினகரனை அப்படியே கைவிட்டு ஒதுங்கி நிற்பாரா என்ற இமாலய கேள்வி தினகரன் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களிடம் பரவிக் கிடக்கிறது. 
இதற்கு விடை சொல்லும் விதமாக சசிகலாவின் அண்மைக்கால சில செயல்பாடுகள் அமைந்திருப்பதாக அமமுக நிர்வாகிகள் சில ஆதாரங்களை முன் வைத்து பேசத் தொடங்கி இருக்கிறார்கள். 
நிச்சயமாக சின்னம்மா தற்போதைய அ.தி.முக. பக்கம் சாய மாட்டார். அதிமுக விவகாரத்தில் பொதுச்செயலாளர் பதவியை மீட்க சட்டப் போராட்டம் நடத்தினாலும் அமமுக வின் வளர்ச்சியில் அதீத ஆர்வம் காட்டுகிறார். குறிப்பாக  கட்சியை வளர்க்க அவர் சிறையில் இருந்தவாறு பல செய்திகளை எங்களுக்கு அனுப்பி வருகிறார். தற்போது கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி நியமிக்கப்படுபவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்ற அறிவுரைகளை சின்னம்மா வழங்கி வருகிறார். மக்கள் முகம் சுழிக்கும்படியாக எப்போதும் நடந்து கொள்ளக் கூடாது. மக்கள் நம் பக்கம் ஈர்க்க அவர்களுக்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்க நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் போன்ற பல நுணுக்கங்களை சொல்லி அனுப்புகிறார். கூடவே அவர் எங்களுக்கு அழுத்தமாகச் சொல்லும் இன்னொரு விஷயம் விரைவில் நான் வெளியே வருவேன் என்பதுதான்.இடைத்தேர்தல் உள்ளாட்சித் தேர்தல், ராதாபுரம் யாருக்குச் சொந்தமாகும் போன்ற பரபரப்புகளைத் தாண்டி சசிகலாதான் தமிழக அரசியலின் அடுத்த பரபரப்பு.

Next Story

மேலும் செய்திகள்