நாகர்கோவிலில் ஏழை மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி

கன்னியாகுமரியில் உள்ள ஏழை மாணவர்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி அளிக்கப்பட்டது
நாகர்கோவிலில் ஏழை மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி
x
கன்னியாகுமரியில் உள்ள ஏழை மாணவர்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவர்களுக்கு, தினத்தந்தி சார்பில் கல்வி நிதி அளிக்கப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. "தினத்தந்தி" சார்பில் 2014 - 2015-ம் கல்வி ஆண்டில் இருந்து மாவட்டத்திற்கு 10 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டு நடைபெற்ற  நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த். மு. வடநேரே கலந்து கொண்டு நிதியை வழங்கினார். இந்த நிதி தங்களுக்கு கல்வி பயில உத்வேகத்தை தருவதாக மாணவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்