பள்ளி மாணவிகள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதல் - 20 பேருந்துகளை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்

தனியார் கல்லூரி பேருந்து மோதி பள்ளி மாணவிகள் 6 பேர் படுகாயம் அடைந்ததால் ஆவேசமடைந்த கிராம மக்கள், அந்த கல்லூரிக்கு சொந்தமான 20 பேருந்துகளை அடித்து நொறுக்கி உள்ளனர்.
பள்ளி மாணவிகள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதல் - 20 பேருந்துகளை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்
x
பெரம்பலூர் - அரியலூர் சாலையில் சித்தளி பிரிவு சாலை என்ற இடத்தில் சாலையோரம் இன்று காலை பள்ளி மாணவிகள்  நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மாணவிகள் மீது மோதியுள்ளது. இந்த தகவல் அறிந்து ஆத்திரமடைந்த 
சித்தளி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட பேருந்துகளை அடித்து நொறுக்கினர். இதனால் ஒரு மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயமடைந்த  மாணவிகள்  சரண்யா, காயத்திரி, செந்தாமரை, கோமதி,  அகல்யா,  ராதிகா ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு பதற்றம் நிலவுவதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.  காயத்ரி என்ற மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்