நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் - கர்நாடகாவிற்கு விரைந்த சிபிசிஐடி போலீஸ்

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட வேலாயுதம் மற்றும் ரஷீத்தை தேடி சிபிசிஐடி போலீசார் சென்னை மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.
x
கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல், நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகார் விசாரணையில், பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்த கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாட்டையே அதிர வைத்துள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் இடைத்தரகர்கள் வேலாயுதம், ரஷீத் ஆகிய இருவரை பிடிக்கும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இடைத்தரகர்களை தேடி, சென்னை மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு சிபிசிஐடி போலீசார் விரைந்துள்ளனர். இந்நிலையில், நீட் ஆள்மாறாட்ட   விவகாரத்தில், நீதிமன்ற காவலில் உள்ள மாணவன் இர்பானை தேனி சிறைக்கு மாற்ற, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்