தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு

தென்பெண்ணையாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு
x
தென்பெண்ணையாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன் முழுக் கொள்ளளவான 44 புள்ளி இரண்டு எட்டு அடியில், தற்போது, 41 புள்ளி எட்டு இரண்டு அடியாக உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 48 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதகு  வழியாக பெருக்கெடுத்து ஓடும் நீரில் ரசயான நுரை பொங்கி வருகிறது. கர்நாடகா மாநிலம் பெல்லந்தூர், ஒரத்தூரில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதே இதற்கு காரணம் என ஒசூர் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்