சென்னையில் செல்போன் திருடிய ஆந்திர கும்பல் கைது

சென்னையில் வாடகை வீட்டில் தங்கி வாரச் சம்பளத்துக்கு செல்போன் திருடிய ஆந்திராவைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் போலீசாரிடம் சிக்கியது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
சென்னையில் செல்போன் திருடிய ஆந்திர கும்பல் கைது
x
இந்த சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் உள்ளது, போலீசாரிடம் சிக்கி உள்ள செல்போன் கொள்ளை கும்பலின் கதை...சென்னை பூக்கடை அ​ருகே சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த இரண்டு பேரை யானை கவுனி போலீசார்  பிடித்து விசாரித்துள்ளனர். எனினும் தற்காலிகமாக விடுவித்த போலீசார் அவர்களது செல்போன் பேச்சு, அன்றாட நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அவர்கள் செல்போன் திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி செல்வதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கு தங்கியிருந்த அந்த கும்பலின் தலைவன் ரவி மற்றும் ஆந்திராவை சேர்ந்த10 பேர் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்துள்ளது. 
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள ஆட்டோ நகர் கிராமத்தைச் சேர்ந்த ரவி. ஆரம்பத்தில் சென்னை வந்து பல்வேறு இடங்களில் தச்சு வேலை செய்து வந்துள்ளான். போதிய வருமானம் கிடைக்காத விரக்தியில் இரண்டு மூன்று, செல்போன் பறிப்பில் அவன் ஈடுபட்டுள்ளான். இதில் எதிர்பார்த்ததை விட அதிக பணம் கிடைத்ததால் இதையே ஏன் ஒரு தொழிலாக செய்ய கூடாது என்ற எண்ணத்தில் தனது கிராமத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை சென்னைக்கு வரவழைத்துள்ளான் ரவி. வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து, அவர்களுக்கு எப்படி செல்போன்களை கொள்ளை அடிப்பது என்று பயிற்சியும் அளித்துள்ளான். கூட்டமாக இருக்கும் இடங்களில், செய்தித்தாளை படிப்பது போன்று செல்போன் பறிப்பது, திருடிய செல்போனின் சிம் கார்டு, மெமரி கார்டுகளை எப்படி கழற்றி வீசுவது என பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் ஐடி ஊழியர் போல திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே வேலை, வார சம்பளம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என அள்ளி வீசி, அவர்களை சென்னையிலேயே தங்க வைத்துள்ளான் ரவி. கொள்ளையடித்த செல்போன்களை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு கொண்டு சென்று ஏஜென்ட் துணையுடன் விற்று விடுவானாம் இந்த ரவி போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஆவடி, செங்குன்றம், சோழவரம் என இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வாடகை வீட்டை மாற்றிக் கொள்வது என திட்டம் போட்டு 2 வருடமாக இயங்கி வந்த மெகா கும்பல் சென்னையில் ஒரு நாளில் குறைந்தது 40 முதல் 50 செல்போன்கள் என கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5000 செல்போன்களை கொள்ளையடித்துள்ளதாக கூறுகின்றனர் போலீசார். தொடர்ந்து போலீசார் நடத்தி வரும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்