புதுச்சேரியில் போக்சோ வழக்கை கிடப்பில் போட்டதாக புகார்

புதுச்சேரியில் போக்சோ வழக்கை கிடப்பில் போட்ட சம்பவம் தொடர்பாக சி பி.சி.ஐ.டி காவல் கண்காணிப்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் போக்சோ வழக்கை கிடப்பில் போட்டதாக புகார்
x
புதுச்சேரி சிபிசிஐடி காவல் துறை கண்காணிப்பாளராக  இருந்த செல்வம் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராக இருந்த காலகட்டத்தில் 2 போக்சோ வழக்குகளை பதிவு  செய்யாமல் கிடப்பில் போட்டதாக புகார் எழுந்தது.  பணியில் அலட்சியமாக இருந்த காரணத்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய டி.ஜி.பி பாலாஜி ஸ்ரீவத்சவா  உத்தரவிட்டார். இதன் படி  அரசுக்கு எதிராக நம்பிக்கை மோசடி செய்ததாக 409 பிரிவின் கீழ் அவர் மீது  வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த எஸ்.பி செல்வம் நெஞ்சுவலி காரணமாக  சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்