சென்னையில் செல்போன் கொள்ளையர்கள் இருவர் கைது

சென்னை திருவொற்றியூரில், செல்போன்களை திருடி வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் செல்போன் கொள்ளையர்கள் இருவர் கைது
x
சென்னை திருவொற்றியூரில், செல்போன்களை திருடி வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில், இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்த இளைஞரை போலீசார் மடக்கி விசாரித்தனர். அப்போது அவர்கள், முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார், இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, உள்ளே மூன்று ஸ்மார்ட் போன்கள் இருப்பது தெரிய வந்தது இதனையடுத்து மனோஜ் மற்றும் அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கடேசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இருவரும், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத பகுதிகளை,  தேர்வு செய்து, கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
 


Next Story

மேலும் செய்திகள்