கோயில் பிரகாரத்தில் தேங்கிய மழைநீர் : மழைநீரை அகற்ற பக்தர்கள் கோரிக்கை

கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில், மழைநீர் சூழ்ந்துள்ளதால் மழைநீரை அகற்ற கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கோயில் பிரகாரத்தில் தேங்கிய மழைநீர் : மழைநீரை அகற்ற பக்தர்கள் கோரிக்கை
x
யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில், மழைநீர் சூழ்ந்துள்ளதால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோயில் பிரகாத்திற்கு வெளியே உள்ள நந்தி மண்டபத்திலும், மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்த பக்தர்கள், உடனடியாக மழைநீரை அகற்ற கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்