ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீர் வரவில்லை - சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பனங்கள்ளியில் காலிக்குடங்களுடன் பெண்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீர் வரவில்லை - சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
x
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பனங்கள்ளியில் காலிக்குடங்களுடன் பெண்கள், குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர், கடந்த 10 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறும் பனங்கள்ளி கிராம மக்கள், தர்மபுரி-பாப்பாரப்பட்டி சாலையில் மறியல் செய்தனர்.தகவலறிந்து வந்த பாலக்கோடு வட்டாட்சியர், தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்