ராஜினாமா செய்துள்ள தலைமை நீதிபதி தஹில் ரமானி இன்று நீதிமன்றத்துக்கு பணிக்கு வராததால் சர்ச்சை

ராஜினாமா செய்துள்ள தலைமை நீதிபதி தஹில் ரமானி இன்று நீதிமன்றத்துக்கு பணிக்கு வராத நிலையில், அவர் பெயரில் 75 வழக்குகள் பட்டியிலிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜினாமா செய்துள்ள தலைமை நீதிபதி தஹில் ரமானி இன்று நீதிமன்றத்துக்கு பணிக்கு வராததால் சர்ச்சை
x
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம், மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது. இந்த பணியிட மாற்றத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி தஹில் ரமானி விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்ற கொலிஜியம்  நிராகரித்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்து  குடியரசு தலைவர் 
மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இந்த ராஜினாமா கடிதம் குறித்து குடியரசு தலைவரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்ததால் தலைமை நீதிபதி தஹில் ரமானி இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வரவில்லை. ஆனால் அவரது அமர்வில் 75 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த 75 வழக்குகளும், நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான இரண்டாவது அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனிடையே, தலைமை நீதிபதி தஹில் ரமானியை அவரது இல்லத்தில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்