தலைமை நீதிபதி மாற்றத்தை கண்டித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு - உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிடப் மாற்றத்தை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அறிவித்துள்ளது.
தலைமை நீதிபதி மாற்றத்தை கண்டித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு - உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு
x
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி  பணியிடப் மாற்றத்தை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக  செய்தியாளர்களை சந்தித்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், மாநிலம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களை கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே, தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்