தஞ்சை : பூண்டிமாதா பேராலய தேர் பவனி

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலயத்தில், நேற்று தேர்பவனி விழா நடைபெற்றது.
தஞ்சை : பூண்டிமாதா பேராலய தேர் பவனி
x
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலயத்தில், நேற்று தேர்பவனி விழா நடைபெற்றது. இங்கு அன்னையின் பிறப்பு பெருவிழா, கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி விழா நேற்றிரவு நடைபெற்றது. இதனையொட்டி, மல்லிகை பூ மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டது. இதனை குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்து, தேர் பவனியை தொடங்கி வைத்தார். தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்