"பொருளாதார மந்தநிலை வெட்ட வெளிச்சமானது" - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

G.D.P. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் படுபாதாளத்தில் விழுந்துள்ளதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலை வெட்ட வெளிச்சமானது -  மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
G.D.P. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் படுபாதாளத்தில் விழுந்துள்ளதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அலங்காரப் பேச்சுகளைப் பேசி மார்தட்டிக் கொள்வதை விடுத்து, இப்போதாவது பாஜக அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். உண்மையான பிரச்சினைகளான வேலை இழப்பு, தொழிற்துறை சரிவு, கிராமப்புற துயரங்கள் - போன்றவை குறித்து மத்திய அரசு பேசி தீர்வு காண வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்