சென்னையில் இடியுடன் கூடிய கனமழை : குளிர்ந்தது சென்னை

சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், மாலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னையில் இடியுடன் கூடிய கனமழை : குளிர்ந்தது சென்னை
x
சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், மாலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தரமணி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வட பழனி, சென்ட்ரல், அரும்பாக்கம் உள்பட பல இடங்களில், மழை, கொட்டி தீர்த்தது. மாலையில் மழை, வெளுத்து வாங்கியதால், அலுவலகம் முடிந்து வீடு திரும்ப முடியாமல், பலர் நடுவழியில் பல மணி நேரம் காத்திருந்தனர். சென்னை மற்றும் புற நகர் பகுதிகள், இந்த மழை காரணமாக குளிர்ந்தது. இதனிடையே, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்