திண்டுக்கல் : மருந்து விற்பனை பிரதிநிதி தாக்கப்பட்ட விவகாரம் - கைது செய்ய கோரி காவல்நிலையம் முற்றுகை

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி தாக்கப்பட்டதை கண்டித்து, 150-க்கும் மேற்பட்ட மருந்து விற்பனை பிரதிநிதிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் : மருந்து விற்பனை பிரதிநிதி தாக்கப்பட்ட விவகாரம் - கைது செய்ய கோரி காவல்நிலையம் முற்றுகை
x
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி தாக்கப்பட்டதை கண்டித்து, 150-க்கும் மேற்பட்ட மருந்து விற்பனை பிரதிநிதிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அரசு பேருந்து ஓட்டுநருக்கும், மருந்து விற்பனை பிரதிநிதி விஜய் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, விஜய் தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த விஜய் அளித்த புகாரின் பேரில், 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, அரசு ஓட்டுநர்களை கைது செய்ய வலியுறுத்தி, 150க்கும் மேற்பட்ட மருந்து விற்பனை பிரதிநிதிகள்  திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்