காமராஜர் நண்பரின் ரூ. 250 கோடி சொத்து அபகரிப்பு : வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நண்பரான சங்கு கணேசன் என்பவரது 250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக அருள்ராஜன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் நண்பரின் ரூ. 250 கோடி சொத்து அபகரிப்பு : வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
x
சென்னை முத்தையால்பேட்டையில் சங்கு கணேசன் 1950ஆம் ஆண்டில் சொந்தமாக இடம் வாங்கி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அப்போது அவரது உதவியாளராக ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் அருள்ராஜன் ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். ராஜேந்திரன் மறைந்து விட்ட நிலையில் அவரது மகன் அருள்ராஜன் ஆள்மாறாட்டம் செய்து சங்குகணேசனின் சொத்துக்களை தனக்கு விற்றது போல் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து கொண்டதாக சங்கு கணேசனின் பேரன் தொழிலதிபர் நாகராஜன் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே சங்கு கணேசன் தானமாக கொடுத்த 
சொத்துக்கள் உள்ளிட்ட ஆவணங்களில் இருக்கும் கையெழுத்து மற்றும் முத்தையால்பேட்டை சொத்து விற்பனை ஆவணத்துடன் ஒத்துபோகவில்லை என்றும் நாகராஜன் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், நாகராஜனின் தாயார் மற்றும் தாயாரின் சகோதரிகள் மரணத்திற்கு பின்னர் வாரிசுதாரர் அடிப்படையில் முத்தையால் பேட்டை சொத்து தொடர்பான ஆவணங்களை பெறும் போது மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்