வங்கிக்கு சென்றவரிடம் ரூ. 9 லட்சம் கொள்ளை : ஒசூரில் நூதன திருட்டு

ஒசூரில் தனியார் வங்கியில் பணம் செலுத்த சென்ற மாதேஷ் என்பவரிடம் நூதன முறையில் 9 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வங்கிக்கு சென்றவரிடம் ரூ. 9 லட்சம் கொள்ளை : ஒசூரில் நூதன திருட்டு
x
ஒசூரில் தனியார் வங்கியில் பணம் செலுத்த சென்ற மாதேஷ் என்பவரிடம் நூதன முறையில் 9 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 10 லட்ச ரூபாயை வங்கியில் செலுத்த சென்ற அவரிடம், செல்போன் கீழே கிடப்பதாக கூறி இரு சக்கரவாகனத்தில் வந்த 2 பேர்  கவனத்தை திசை திருப்பி பணப்பையை பறித்து சென்றனர். அப்போது ஒரு லட்ச ரூபாய் பையிலிருந்து சாலையில் விழ 9 லட்ச ரூபாயுடன் கொள்ளையர்கள் தப்பி விட்டனர். இதேபோல் சூளகிரி அருகே  தொட்டி கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 23 சவரன் தங்கநகைகள் மற்றும் 45 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருசி சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்