மர்ம பொருள் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் : வெடித்த‌து ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் ஷெல்
பதிவு : ஆகஸ்ட் 27, 2019, 12:35 AM
காஞ்சிபுரம் மானாமதி கோவிலில் 2 பேர் உயிரிழக்க காரணமான வெடிபொருள் பொருள் ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் ஷெல் என்பது தெரிய வந்துள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தை சுத்தம் செய்த போது , மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனைஅப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உடைக்க முயன்றபோது, பயங்கர சத்த‌த்துடன் அந்த பொருள் வெடித்து சிதறியது. இதில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கூவத்தூரை சேர்ந்த சூர்யா என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று காலை திலீபன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்தநிலையில் மானாம்பதி குண்டு வெடித்த பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வெடி குண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வெடிக்காத மற்றொரு மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பதற்றம் அதிகரித்த‌து. இந்த நிலையில் வெடித்த பொருள் ராணுவ ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் ஷெல் என்பது தெரிய வந்துள்ளது. ஷெல் இந்த பகுதிக்கு வந்த‌து எப்படி  என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3320 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

293 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

289 views

பிற செய்திகள்

நிதி மோசடி குற்றவாளி வருவதாக பரவிய தகவல் - நீதிமன்றத்துக்கு 300 பேர் வந்ததால் பரபரப்பு

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 views

"உணவு பொருள் பூங்காவுக்கு நிலம்" - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

1 views

தமிழக ஆளுநருடன் திருமாவளவன் சந்திப்பு : 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை மனு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திருமாவளவன் சந்தித்தார்.

1 views

"கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவை" - மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

11 views

"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது" - பன்னீர் செல்வம்

தன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

35 views

கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

639 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.