இஸ்லாம் மதத்திற்கு மாறிய பெண்ணுக்கு எதிர்ப்பு : விரும்பிய மதத்தை பின்பற்றலாம் - நீதிபதிகள்

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பெண்ணை, சட்ட விரோதமாக காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளது தவறு என்று கூறிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, பெண்ணை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாம் மதத்திற்கு மாறிய பெண்ணுக்கு எதிர்ப்பு : விரும்பிய மதத்தை பின்பற்றலாம் - நீதிபதிகள்
x
இஸ்லாம் மதத்திற்கு மாறிய பெண்ணை, சட்ட விரோதமாக காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளது தவறு என்று கூறிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, பெண்ணை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனால் பெண்ணின் தந்தை, அவரை வீட்டில் அடைத்துள்ளார். இது தொடர்பாக பெண்ணின் தம்பி அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரை காப்பகத்தில் வைத்துள்ளனர். இதனிடையே, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் மலர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள்,  சத்தியநாராயணன்,  புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்று கூறிய நீதிபதிகள், மதம் மாறிய பெண் அவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்