விடிய விடிய கனமழை..பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
விடிய விடிய கனமழை..பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. இதேபோல், செங்கல்பட்டிலும் விடிய விடிய கனமழை பெய்தது.  கூடுவாஞ்சேரி, வண்டலூர், உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கும்பகோணத்தில் 5 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை 



கும்பகோணத்தில் 5 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலை முதல் கன மழை பெய்தது.  இதன் காரணமாக பூமி குளிர்ந்து, குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இந்த மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் : இடி மின்னலுடன் கன மழை..



பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளான பாடாலூர், வேப்பந்தட்டை, குன்னம், வேப்பூர், வாலிகண்டபுரம், மங்கலமேடு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை 6 மணி முதல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.  மழையின் காரணமாக கிணறு,  குளம், ஏரி, கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் தேங்க துவங்கியுள்ளதால்   பொது மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல்  : இரவு முழுவதும் சாரல் மழை.. 



நாமக்கல்  மாவட்டத்தில்,இரவு முழு வதும் சாரல் மலை பெய்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக வரட்சியான வானிலை நிலவி வந்த போதிலும் நேற்று  வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருந்தது.இந்நிலையில் மாலையில் மேகங்கள் திரண்டு நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  இடி மின்னல் காற்றுடன் கன மழை பெய்தது.இதனால் வெப்பம் குறைந்து குளிர்ந்த சீதோசன நிலை ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்