பவானிசாகர் நீர்வரத்து 5,861 கனஅடியாக குறைந்தது

சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு இன்று நீர்வரத்து 5861 கனஅடியாக குறைந்தது.
பவானிசாகர் நீர்வரத்து 5,861 கனஅடியாக குறைந்தது
x
சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு இன்று நீர்வரத்து 5861 கனஅடியாக குறைந்தது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். கடந்த சில தினங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்தமழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 5ஆம் தேதி 63 அடியாக இருந்த நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, இன்று காலை நிலவரப்படி 91.59 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து, இன்றைய நிலவரப்படி 5861 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்